பாஜகவுடன் இணைந்த சமக.. உடனே சில மாற்றங்களை செய்த "நாட்டாமை" - வெள்ளை நிற காரில் பாஜக கொடியுடன் சரத்குமார்!

Ansgar R |  
Published : Mar 12, 2024, 07:13 PM IST
பாஜகவுடன் இணைந்த சமக.. உடனே சில மாற்றங்களை செய்த "நாட்டாமை" - வெள்ளை நிற காரில் பாஜக கொடியுடன் சரத்குமார்!

சுருக்கம்

Sarathkumar Joins BJP : பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான சரத்குமார் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று தனது சமத்துவ மக்கள் கட்சியை, பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தனது சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று நடிகரும், அரசியல் தலைவருமான சரத்குமார் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வாக இன்று தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து ஒரு மாபெரும் முடிவை எடுத்திருக்கிறார் நடிகர் சரத்குமார். 

இதற்கு அவர் கட்சியில் இருக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தான் முழு மனதுடன் இந்த செயலை அவர் செய்திருப்பதாக கூறியுள்ளார். சரத்குமார் சில தினங்களுக்கு முன்பு இரவு இரண்டு மணி அளவில் தூக்கத்திலிருந்து விழித்து, தனது மனைவியிடம் பாஜகவில் இணையலாம் என்று இருக்கிறேன் என்று தான் கூறியதாகவும் கூறினார். 

நாட்டாமை பட பாடல்.. பாஜக அலுவலகம் முன் டான்ஸ் ஆடும் சரத் மற்றும் குஷ்பூ - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

காமராஜரோடு, மோடியை ஒப்பிட்டு பேசி மிகவும் எமோஷனலாக இன்று பேசினார் நடிகர் சரத்குமார். அதேபோல நடிகர் சரத்குமார் குறித்து பேசிய பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், சரத்குமாரை போன்ற ஒரு சக்தி மிகுந்த மனிதரை தமிழகத்தில் அடைத்து வைக்க பாஜக விரும்பவில்லை என்றார்.  

சரத்குமார் அவர் தேசத்திற்கு தேவைப்படும் ஒரு தலைவர் என்று கூறி புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் பயன்படுத்தும் காரில் தனது சமத்துவ மக்கள் கட்சியின் கொடியை அகற்றிவிட்டு, பாஜகவின் கொடியை பறக்க விட்டிருக்கிறார் சரத்குமார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - ஜெயக்குமார் திட்டவட்டம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!