நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற நடவடிக்கை... அமைச்சர் கே.என்.நேரு தகவல்!!

By Narendran SFirst Published Mar 30, 2023, 9:02 PM IST
Highlights

நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்து ஆய்ந்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்து ஆய்ந்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழ்நாட்டில், கடந்த ஆண்டில், 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் தரத்திற்கு ஏற்றவாறு பணியாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.730 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்... சென்னை ரேஸ் கிளப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மன்னர்களின் தலைநகரங்களாக இருந்த இராமநாதபுரம், புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் வர்த்தக நகரமான நாமக்கல், கல்வி நகராமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கைகள் வந்த வண்ணமுள்ளன. அதேபோல் ஶ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், பெருந்துறை, அவிநாசி, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு போன்ற சில பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமெனவும், சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமெனவும், கோரிக்கைகள் வந்து கொண்டுள்ளன.

இதையும் படிங்க: வேலூர் கோட்டையில் பெண் மிரட்டப்பட்ட விவகாரம்; இஸ்லாமியர்கள் காவல் நிலையத்தை முற்றுகை

நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்து ஆய்ந்து விரைவில் முடிவு எடுக்கப்படும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் டிசம்பர் 2024-ல் முடிவடைவதால், அதற்கு பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை நகர்புர உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பதை, ஊரக வளர்சித் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து முதலமைச்சரின் உத்தரவு பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

click me!