வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தீவிரம் அடையும் வட கிழக்கு பருவ மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இயல்பை விட மழையானது அதிகளவு பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பொறுத்த வரையிலும் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை வடகிழக்கு தமிழகத்தில் மொத்தமாக 401 மி.மீ மழை பதிவாகியுள்ளது இது இயல்பான அளவு பெய்துள்ளது. சென்னையில் 756 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இயல்பான மழையின் அளவு 736 மி.மீட்டர். இயல்பை விட 16 சதவீதம் அதிகம் மழை அதிகமாக பதிவாகியுள்ளது. இதே போல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை
இந்தநிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 15.12.2022 முதல் 17.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிசம்பர் 19ம் தேதி தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்