நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! 16 ஆம் தேதி முதல் மீண்டும் மழை.? எந்த பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு.?

By Ajmal KhanFirst Published Dec 14, 2022, 2:53 PM IST
Highlights

தென் கிழக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மழை எச்சரிக்கை

வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14.12.2022: தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.12.2022 முதல் 17.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 18.12.2022: தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

குன்னூர்  (நீலகிரி) 30, நீடாமங்கலம்  (திருவாரூர்) 16, திருமானூர்  ( அரியலூர்) 15, குன்னூர் PTO  (நீலகிரி) 14, 

ஆற்று வெள்ளத்தில் அடித்து செலப்பட்ட பெண்கள்… நீலகிரி அருகே நிகழந்த அதிர்ச்சி சம்பவம்!!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

14.12.2022 & 15.12.2022: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தை அமாவாசை ஸ்பெஷல் - மதுரையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில் - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ?

55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று

16.12.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17.12.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

நேரம், காலம் பார்த்து உதயநிதி பதவி ஏற்பது ஏன்?? பாஜகவினரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த டி கே எஸ்

click me!