டிச.5ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.! 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று.!மீனவர்களுக்கு எச்சரிக்கை

By Ajmal Khan  |  First Published Dec 1, 2022, 1:07 PM IST

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.  இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக, 01.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  
02.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  
03.12.2022:  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  
04.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

Tap to resize

Latest Videos

பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை..? குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயம்..? கூட்டுறவுத்துறை உத்தரவு

சென்னையில் வானிலை 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது /  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 பதிவான மழை அளவு

கோடியக்கரை (நாகப்பட்டினம்) 8, வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 5, சிதம்பரம் AWS (கடலூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), மதுக்கூர் (தஞ்சாவூர்), சிதம்பரம் (கடலூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு)

ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! திமுகவினருக்கு கட்டளையிட்டு தீர்மானம்..?

மீனவர்களுக்கான எச்சரிக்கை

04.12.2022: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05.12.2022: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

ஆளுநர் ஆர் என் ரவி செல்லுமிடமெல்லாம் கருப்பு கொடி காட்டப்படும்..? எச்சரிக்கை விடுத்த கி.வீரமணி
 

click me!