தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க;- கேன்களில் கடத்தப்பட்ட 400 கிலோ வெள்ளை நிறத்திலான பவுடர்.! சிக்கியது வெடி மருந்தா.? கடலோர காவல்படை விளக்கம்
undefined
தாம்பரம்:
ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகர், முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், மாணிக்கம் நகர், புருஷோத்தமன் நகர் பகுதி, புவனேஸ்வரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
எழும்பூர்:
ஏழு கிணறுகள் பி.ஆர்.என்.கார்டன், பிடாரியார் தெரு, ஆசிர்வாதபுரம், புனித சேவியர் தெரு, மின்ட் தெரு, கே.என்.டேங்க் தெரு, ஏழு கிணறு தெரு, பாரக்ஸ் தெரு, நார்த் வால் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- விடாமல் உயிர் பலி கேட்கும் ஆன்லைன் ரம்மி.. பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை..!