ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த விளையாட்டை தடையை மீறி விளையாடினாலோ அல்லது விளம்பரம் செய்தாலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து பெரும்பாலான குடும்பங்கள் நடு ரோட்டிற்கும் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளன. இந்த விளையாட்டு காரணமாக 100க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆன் லைன் ரம்பி போன்ற நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக இந்த சட்ட மசோதாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட மசோதாவை கொண்டு வரும் வகையில் அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்கப்பட்டது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை நியமித்தது.
மாம்பழம் சின்னத்தை இழந்த பாமக..! மாநில கட்சி அந்தஸ்து பறிப்பு- அதிர்ச்சியில் ராமதாஸ்
ஆளுநர் ரவி ஒப்புதல்
இதனையடுத்து இந்த மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ரவி இந்த மசோதாவை நிராகரித்து மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பிவைத்தார். இதனையடுத்து இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று ஆளுநர் ரவி இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் இந்த மசோதா உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் என கூறினார். எனவே இந்த சட்ட மசோமா அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த விளாயைட்டை விளையாடினார் சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீறி விளையாடினால் சிறை தண்டனை
அதன்படி, தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
விளம்பரம் செய்தாலும் சிறை
சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம்.. வாண்டடாக வந்து சிக்கிய இபிஎஸ்? அதிர்ச்சியில் அதிமுக..!