10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம்... SYNONYMS-ஆ ANTONYMS-ஆ என மண்டையை பிய்த்துக்கொண்ட மாணவர்கள்!!

Published : Apr 10, 2023, 11:22 PM IST
10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம்... SYNONYMS-ஆ ANTONYMS-ஆ என மண்டையை பிய்த்துக்கொண்ட மாணவர்கள்!!

சுருக்கம்

10 ஆம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் குறித்து குறிப்பிடப்படாததால் அந்த கேள்வியை அட்டென்ட் செய்த அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

10 ஆம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் குறித்து குறிப்பிடப்படாததால் அந்த கேள்வியை அட்டென்ட் செய்த அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு இன்று நடந்தது. வினாத்தாளில் கேட்கப்பட்டு இருந்த ஒரு மார்க் வினாக்களில் பிரிண்டிங் பிழைகள் இருந்ததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பத்தாம் வகுப்பு இறுதி தேர்வில் வழக்கமாக கேட்கப்படுவது போல 1,2,3 ஆகிய கேள்விகள் அருஞ்சொல் பொருள் (SYNONYMS) ஆகவும்  4,5,6 ஆகியவை எதிர்ச் சொல் ( ANTONYMS) ஆகவும் இந்த ஆண்டும் கேட்கப்பட்டது. ஆனால் இன்று வழங்கப்பட்ட வினாத்தாளில் 4,5,6 கேள்விகளுக்கு எதிர்ச் சொல் பதில்கள் அச்சிடப்படவில்லை.

இதையும் படிங்க: முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் மறைவு - தலைவர்கள் இரங்கல்

இதனால் மாணவர்கள் அருஞ்சொற் பொருளை எழுத வேண்டுமா அல்லது எதிர்ச் சொல்லை எழுத வேண்டுமா என்று குழப்பம் அடைந்தனர். இந்த வினாக்களை அட்டென்ட் செய்து இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வினாத்தாளின்படி பகுதி ஒன்று பொருத்தமான மற்றும் எதிர்ச்சொற்களைக் கொண்டது. அதாவது 10 ஆம் வகுப்பு ஆங்கில வினாத் தாளில், 4 ஆவது கேள்வியாக I forgot all about Mr, Hamel’s ruler and how cranky he was: என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு (a) unusal (b) familiar (c} unfamiliar (d) strange என்ற பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: சென்னை வந்த பிரதமர் மோடி… இசையமைப்பாளர் சித்திரவீணை என். ரவிகிரணை சந்தித்து பேச்சு!!

இதில் முதலாவதாக இருக்கும் unusual என்பதற்கு பதிலாக, unusal என்று எழுத்து பிழை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி CRANKY என்னும் கேள்விக்கு பதிலாக அருஞ்சொற் பொருளை எழுத வேண்டுமா அல்லது எதிர்ச் சொல்லை எழுத வேண்டுமா என்பது குறித்தும் எதும் வினாத்தாளில் குறிப்பிடப்படவில்லை. இதனால் மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதனை எழுதியுள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு வினாத்தாளிலும் தவறு நிகழ்ந்துள்ளது குறிப்பிடதக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி