
கிருஷ்ணகிரி அருகே தரைப்பாலத்தில் இன்று அதிகாலையில் கர்நாடக மாநில பேருந்தும் நேருக்கு நேர் மோதியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல் பட்டியில்தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். அதிகாலையில் வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி வாகனங்கள் மோதிகொள்வது உரசிகொள்வது நடந்து வருகிறது.
இதை தடுக்க வாகனங்கள் மெதுவாக செல்லும் வண்ணம் தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதில் அலட்சியம் காட்டுவதால் விபத்து ஏற்படுகிறது.
இன்று அதிகாலை சாமல்பட்டி தரைப்பாலத்தில் கர்நாடக அரசு பேருந்தும் , வட இந்தியாவிலிருந்து வந்த சரக்கு லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டு வாகனங்களும் எதிர் எதிரே நிறுத்தப்பட்டதால பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.