நாளை நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!

First Published Nov 6, 2016, 2:08 AM IST
Highlights


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 301 மையங்களில் நாளை நடைபெற உள்ளது.

இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 5,451 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான ஹால் டிக்கெட்டுக்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறாதவர்கள் www.tnpsc.com என்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணத்தையும் மேற்கண்ட இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு பணிகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில், சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தில் மொபைல் போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு முன்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளைக் கவனமாகப் படித்து விட்டு தேர்வறைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!