அதிரடி விலை உயர்வில் ஆவின் ஐஸ்கிரீம்

Asianet News Tamil  
Published : Dec 09, 2016, 08:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
அதிரடி விலை உயர்வில் ஆவின் ஐஸ்கிரீம்

சுருக்கம்

ஆவின் ஐஸ் கிரீம் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் ஐஸ்கிரீம் விலை குறைந்தபட்சம் ரூ.2ல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.8 வரை விலை உயர்த்தப்படுகிறது. ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும்  பாலை, பாலாக விற்றது போக மீதமுள்ள பாலை நெய், வெண்ணெய், மோர், தயிர், பால்கோவா, ஐஸ்கிரீம் என பல்வேறு பால் பொருட்களை தயாரித்து விற்பனை  செய்கிறது.

ஐஸ்கிரீமில் மேங்கோ, ஸ்டாபெரி, சாக்லெட், பிஸ்தா, பட்டர் ஸ்காட்ச், உலர் பழவகைகள், கசட்டா உள்ளிட்ட கப் வகைகள் தயாரிக்கப்படுகிறது.

கிளாசிக் கோன், மேங்கோ டிலைட், குல்பிபார், கசட்டா சிலைஸ், பால் ஐஸ்கிரீம் என பலவித குச்சி ஐஸ்கிரீம்களையும் ஆவின் நிர்வாகம் தயாரித்து விற்பனை செய்கிறது.

ரூ.20க்கு விற்று வந்த குல்பி ஐஸ், இனி ரூ.25க்கும், 50 கிராம் கொண்ட கப் ஐஸ் ஒன்று ரூ.25ல் இருந்து ரூ.28க்கும், கோன் ஐஸ் ஒன்று ரூ.20ல் இருந்து  ரூ.28க்கும், கப் மற்றும் குச்சி ஐஸ்கிரீம்கள் ரூ.2 முதல் ரூ.8 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை ஏற்றம் ஓரிரு  நாட்களில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

மேடையில் மயங்கி விழுந்த எச்.ராஜா.. ICU-வில் தீவிர சிகிச்சை.. என்னாச்சு?
இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!