IT Raid: வரி ஏய்ப்பு புகார்... பிரபல ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் ஐ.டி. ரெய்டு...!

Published : Jun 07, 2022, 10:11 AM ISTUpdated : Jun 07, 2022, 01:01 PM IST
IT Raid: வரி ஏய்ப்பு புகார்... பிரபல ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் ஐ.டி. ரெய்டு...!

சுருக்கம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டர் மையங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டர் மையங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் காலை முதலே  வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்ட கிளை அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. மேலும், வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

வரி ஏய்ப்பின் புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக முறையாக வருமான வரி செலுத்தாததால் ஏற்பட்ட வரி ஏய்வு புகாரை அடுத்து இந்த சோதனை காலை முதலே நடைபெற்று வருகின்றது. 

PREV
click me!

Recommended Stories

விஜய் 2வது முறை CBI அலுவலகத்தில் ஆஜர்… கேள்விகள் என்ன? முழு அப்டேட்
விஜய்யை திக்குமுக்காட வைத்த சிபிஐ.. 6 மணி நேரம்.. தளபதிக்கு தலைவலி கொடுத்த 'அந்த' கேள்விகள்!