தினமும் ஒரு காரணம் சொல்லி மக்களை அலைக்கழிக்கும் ஆதார் மையங்கள் - ஒரு வாரமாக பணிகள் முடக்கம்...

 
Published : Feb 01, 2018, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
தினமும் ஒரு காரணம் சொல்லி மக்களை அலைக்கழிக்கும் ஆதார் மையங்கள் - ஒரு வாரமாக பணிகள் முடக்கம்...

சுருக்கம்

Aadhaar centers where people are being told everyday - for one week the tasks are freezing ...

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், நகராட்சி அலுவலகங்களில் உள்ள ஆதார் சேவை மையங்களில் தினமும் பணியாளர்கள் பற்றாக்குறை, சர்வர் பிரச்சனை போன்ற காரணங்களால் மக்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் அரசு கேபிள் டி.வி நிறுவனம் மற்றும் எல்காட் நிறுவனக் கட்டுப்பாட்டின் கீழ் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன.

இந்த மையங்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக  நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இவற்றில் ஏற்கனவே, வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர்  வட்டாட்சியரக சேவை மையங்களும், இ-சேவை மையங்களும் கடந்த சில மாதங்களாகவே முறையாகச் செயல்படவில்லை.

இதனால், மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியரகம், நகராட்சி அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்கள்.

நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருப்பதாகவும், அதன்பிறகு பூட்டப்பட்டிருப்பதாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு அதிகளவில் மக்கள் வருகின்றனர்.

இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் சர்வர் பிரச்சனை எனக்கூறி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவ்வப்போது புகைப்படம் எடுக்கும் பணி, பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் மக்கள் திரும்பி அனுப்பப்படுகின்றனர்.

மேலும், பிழை திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு ரூ. 25-க்கு பதிலாக ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே, சர்வர் பிரச்சனை மற்றும் பணியாளர்கள் இல்லாததால் கடந்த ஒரு வாரமாக ஆதார் சேவை மையம் பூட்டியே கிடக்கிறது.  இதனால், இங்கு வரும் மக்கள் நாள்தோறும் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதனையறிந்த தனியார் மையங்கள், மக்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு ஆதார் பணிகளை  செய்கின்றனர்.

இதுகுறித்து, ஆதார் புகைப்படம் எடுக்க  ஆட்சியரகத்துக்கு வந்தவர்கள் கூறியது: "மாவட்டத்தில் ஆட்சியரகத்தில் உள்ள ஆதார் மையம் மட்டுமே நாள்தோறும் செயல்பட்டது. இதுவும் தற்போது திறக்கப்படாததால், கடந்த ஐந்து நாள்களாக வந்து செல்கிறோம்.

இதுவரை, பேருந்துக் கட்டணமாக ரூ. 300 செலவழித்துள்ளோம். எனவே, முறையாக ஆதார் மையங்களை நாள்தோறும் திறந்து மக்களின் சேவைக்காக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!