சென்னையில் மின்சார ரயில் மோதி இளம்பெண் பலி.. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஏற்பட்ட சோகம்

Published : Jul 31, 2023, 12:33 PM IST
சென்னையில் மின்சார ரயில் மோதி இளம்பெண் பலி.. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஏற்பட்ட சோகம்

சுருக்கம்

சென்னை தாம்பரம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது இளம்பெண் ஒருவர், மின்சார ரயிலில் அடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்நிலையம் செல்ல தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயிலை பார்த்த உடன் இருவரும் தண்டவாளத்தின் ஓரமாக ஒதுங்கி நின்றுள்ளனர். எனினும் ரயிலின் ஒரு பகுதி அவர்கள் மீது மோதியதால் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இதில் செல்சியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாழினி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இதுகுறித்து தகவலறிந்து தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்சியா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை ரயில் தண்டவாள பகுதிகளில் இது போன்று விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. கல்லூரி மாணவ  மாணவியர், வேலைக்கு செல்வோர் என தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் போது உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கிறது. தண்டவாளங்களில் நடக்க கூடாது, தண்டவாளங்களை கடக்க கூடாது பல அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும், பலரும் விழிப்புணர்வின்றி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!