சொத்துக்காக மாமியாரை கொன்று புதைத்த மருமகன் - போலீஸ் அதிரடி நடவடிக்கை...

 
Published : Sep 19, 2017, 09:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
 சொத்துக்காக மாமியாரை கொன்று புதைத்த மருமகன் - போலீஸ் அதிரடி நடவடிக்கை...

சுருக்கம்

A woman was killed and her body was buried near Madurai. Police have arrested three persons in this regard.

மதுரை அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். 

மதுரை துவரிமான் அருகே புல்லுத்து பாய்ஸ் டவுன் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஜோதி. 
இவர் சில நாட்களுக்கு முன்பு காணவில்லை என அவரது மகன் ஹரிஸ் கரிமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சொத்துக்காக ஜோதியின் மருமகன் செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் அருண்பாண்டி, காதர் ஆகியோர் சேர்ந்து கொலை செய்துவிட்டு ஜோதியின் உடலை புதைத்துள்ளது தெரியவந்தது. 

இதைதொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை அழைத்து சென்று ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் குற்றவாளிகள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

சிவனும், முருகனும் இந்து கடவுளா..? பாஜகவுக்கு எதிராக சீறிய சீமான்..!
சவுக்கு சங்கரை கைது செய்திருப்பது அப்பட்டமான துன்பறுத்தல்.. திமுகவுக்கு எதிராக குமுறும் கார்த்தி சிதம்பரம்