ஈரோட்டில் வாக்கு சேகரிக்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலினிடம், ஓட்டுரிமை உள்ள எனக்கு மகளிர் உரிமை தொகை மறுப்பது ஏன் என பெண் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார், காரணம் இல்லாமல் மறுக்க வாய்ப்பு இல்லையென முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அந்த பெண் தான் ஒரு அரசு ஊழியரின் மனைவி என தெரிவித்தார். அதற்கு முதலமைச்சர் இது தான் மகளி்ர் உரிமை தொகை மறுக்க காரணம் என கூறினார்
தீவிர பிரச்சாரத்தில் ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு சின்னிம்பாளைம் பகுதியில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஈரோடு, கரூர், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இதற்காக நேற்றிரவு சேலம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு ஈரோட்டிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினார். இதனிடையே இன்று சம்பத்நகர் பகுதியிலுள்ள உழவர்சந்தை பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சியை மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
காலையிலேயே வாக்கு சேகரித்த ஸ்டாலின்
மேலும் உழவர் சந்தையில் இயங்கி வரும் 120 க்கும் கடைகளில் வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலையை கேட்டறிந்து வாக்குகள் சேகரித்தார். மேலும் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.அப்போது பெண்கள் , குழந்தைகள் முதல்வர் ஸ்டாலின் கை குலுக்கியும் , செல்பியும் எடுத்தனர். இதனிடையே உழவர்சந்தை அருகே நடைபாதையில் வியாபாரிகளிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.அப்போது தூய்மை பணியாளர் மூர்த்தி என்பவரின் மனைவியான காய்கறி வியாபாரி விஜயா என்பவர் இரண்டு முறை கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தும் , விண்ணப்பம் நிராகரிப்பட்டதாகவும் முறையிட்டார்.
மகளிர் உரிமை தொகை
ஓட்டுரிமை உள்ள எனக்கு மகளிர் உரிமை தொகை பெற தகுதியில்லை என எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர். ஆயிரம் ரூபாய் கூட வாங்க உனக்கு தகுதியில்லை என வீட்டில் பேசுவதாகவும் ஸ்டாலினிடம் முறையிட்டார். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் காரணம் இல்லாமல் நிராகரிக்க வாய்ப்பு இல்லையென தெரிவித்தார். ஏதோ ஒரு காரணம் இருக்கும் என கூறினார். அப்போது தான் ஒரு அரசு ஊழியரின் மனைவி என அந்த பெண் தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இது தான் காரணம் என கூறினார்.
இதையும் படியுங்கள்
மணிக்கணக்கில் காத்திருந்து பலாப்பழத்தை பறித்துச் சென்ற ஓபிஎஸ்; துரை வைகோவுக்கு தீப்பெட்டி ஒதுக்கீடு