டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு நேரடியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்குச் செல்ல இருந்த நிலையில், அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் தென் மாவட்டங்களைப் பார்வையிடச் செல்வதாக இருந்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை காலையில் விமானம் மூலம் சென்னை திரும்பும் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்துக்குச் சென்று அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு மாலையில் தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் செல்வார் என்று சொல்லப்படுகிறது.
undefined
சென்னையில் அதிகாரிகளிடம் பேசி நிவாரணப் பணிகள் குறித்த விவரங்களைச் சேகரித்துக்கொண்டு விமானம் மூலம் மதுரை செல்ல இருக்கிறார். பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
வெள்ளம் வடியாததால் தூத்துக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மறுநாள் (டிசம்பர் 21)ஆம் தேதி முழுவதும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கான நிதியை விரைவில் விடுவிக்க வலியுறுத்தி இருக்கிறார். நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடியும் நிரந்தரத் தீர்வுக்காக ரூ.12,659 கோடியும் வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார்.
தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.2000 நிதியை உடனடியாக விடுவிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பயணிகள் சென்னை செல்ல ஏற்பாடு