தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?தென் மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்-எந்த ரயில் நிலையத்தில் நிற்கும் தெரியுமா

By Ajmal Khan  |  First Published Nov 9, 2023, 9:13 AM IST

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு ரயில் சேவைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
 


தீபாவளி சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையொட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை விடுமுறை தினம் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல லட்சக்கணக்கானோர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்,  அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ( ரயில் எண் 06001 மற்றும் 06002 ) இந்த ரயிலானது வருகின்ற 10 மற்றும் 12ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 12:30 மணியளவில் தூத்துக்குடியை சென்று சேருகிறது.

Tap to resize

Latest Videos

தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

இதே போல தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 11 மற்றும் 13ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.  இந்த ரயிலானது மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 4 . 45 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக தூத்துக்குடி சென்று சேருகிறது. இந்த ரயிலில் மூன்று ஏசி பெட்டியும்,  10 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியும்,  5 முன்பதிவு இல்லாத பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லைக்கு சிறப்பு ரயில்

இதே போல தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு வந்தே பாரத் ரயிலிலும் இயக்கப்படுகிறது.  இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வருகின்ற 10,11, 13,  14 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.  இந்த ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.45மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு நெல்லையை சென்று சேர்கிறது.

இதே போல திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும் வந்தே பாரத் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது.  இந்த ரயிலானது 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது இந்த ரயில் மதியம் 3 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11:15 மணிக்கு சென்னையை வந்து சேருகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 

இதையும் படியுங்கள்

பெரியார் சிலை அகற்றப்படுமா.? அண்ணாமலைக்கு தான் பின்னடைவு- தமிழகம் ஏற்றுக்கொள்ளாது- ஜெயக்குமார்

click me!