தீபாவளி பண்டிகை.!பொது மக்கள் வசதிக்காக சிறப்பு ரயில்-எந்த தேதியில் எங்கிருந்து ? தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Nov 7, 2023, 10:34 AM IST

தீபாவளி பண்டிகை மற்றும் அதனை தொடர்ந்து வரும் விஷேச நாட்களுக்காக தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக தாம்பரத்தில் இருந்தும், நாகர்கோவிலில் இருந்து ரயில்கள் இயக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 


சிறப்பு ரயில் அறிவிப்பு

தீபாவளி மற்றும் விஷேச நாட்களை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்டம் கூட்டமாக முட்டி மோதி இடத்தை பிடிப்பார்கள். இதற்காகவே தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆயூத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை தினத்தையொட்டி சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றிருந்தனர். இந்தநிலையில் வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி (13ஆம் தேதி) திங்கட்கிழமையும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால்  அதே நேரத்தில் ரயில் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

 இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 10-ஆம் தேதி 7.30 மணிக்கு ரயில் புறப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரயின் எண் ( 06061) இந்த ரயிலானது செங்கல்பட்டு விழுப்புரம் மதுரை விருதுநகர் திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை அடுத்த நாள் காலை  7.  10 மணிக்கு சென்றடைகிறது.

நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

இதே போல நாகர்கோயில் இருந்து மங்களூருக்கும் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது.  வருகின்ற 11ஆம் தேதி இந்த ரயில் மதியம் 2. 45 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து புறப்படுகிறது. இந்த  ரயிலானது( வண்டி எண் 06062 )திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், திருச்சூர் வழியாக மங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதாவது தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை 5. 15 மணிக்கு மங்களூரை சென்றடைகிறது.

மங்களூருக்கு சிறப்பு ரயில்

இதே போல மங்களூரில் இருந்து தாம்பரத்திற்கும் பண்டிகை கால சிறப்பு ரயிலானது  (ரயில் எண் 06063) இயக்கப்படுகிறது.  மங்களூருவில் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது அடுத்த நாள் காலை 5. 10 மணியளவில் தாம்பரம் வந்தடைகிறது.இந்த ரயில்களில் ஏசி 2 டயர் ஒரு பெட்டியும் ஏசி 3 டயர் 6 பெட்டிகளும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டி 9 பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டி இரண்டு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தென் மாவட்டங்களுக்கு இன்னொரு சிறப்பு ரயில்! தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே அறிவிப்பு
 

click me!