லாரி மீது மோதிய அரசு பேருந்து!!மீட்பு பணியின் போது அடுத்தடுத்து மோதிய 4 கார்கள்-அதிகாலையில் நடந்த ஷாக் சம்பவம்

By Ajmal Khan  |  First Published May 20, 2024, 9:27 AM IST

லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்திய போது அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


லாரி மீது மோதிய பேருந்து

திருச்செங்கோட்டில் இருந்து அரசு செகுசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள  ஆசனூர் பகுதியில் வந்துபோது  ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் தூக்க கலக்கத்தால் முன்னாள் சென்ற லாரி மீது வேகமாக   மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில்  பேருந்தில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட 14 படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக  தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tap to resize

Latest Videos

மிக கன மழை பெய்யப்போகுது... மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருங்க- அலர்ட் செய்த பொது சுகாதாரத்துறை

அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்

விபத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் ராட்சத இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது   அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களில் பயணம் செய்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து  வாகனங்களை அப்புறப்படுத்தும் போது மற்ற வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும் ஆனால் உரிய முறையில் எச்சரிக்கை செய்யாத காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி.. பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்!

click me!