நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருவதால் 4 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 18:122023 அன்று பொது விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வெளுத்து வாங்கும் கன மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழையானது பெய்து வருகிறது, இதனால் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வெள்ள அபாச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் 85 செ.மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. இதனையடுத்து இந்த 4 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
undefined
பொது விடுமுறை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கன மழை முதல் அதிகன மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள். கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள். வங்கிகள். நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று 18.12.2023 பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்