ஒரே ஒரு நாள் லீவு விடுங்க..! உங்களுக்கு கோயில் கட்டுறேன் மேடம்.! ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பி கெஞ்சிய மாணவர்கள்

By Ajmal Khan  |  First Published Oct 12, 2022, 11:48 AM IST

மழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்க கோரி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு  மாணவர்கள் அனுப்பிய மெசேஜை சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
 


மழை பெய்கிறது- லீடு விடுங்க

எப்படா மழை பெய்யும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை விடுவார்கள் என மாணவர்கள் ஆர்வமோடு எதிர்பாத்து காத்திருப்பார்கள், அப்படியே மழை பெய்தாலும் பள்ளிக்கு விடுமுறை விடவில்லையென்றால் மாணவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்கள். அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கடந்த 30ஆம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனையடுத்து 10 நாட்களுக்கு பிறகு கடந்த திங்கட் கிழமை பள்ளியானது திறக்கப்பட்டது. ஆனால்  தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து  மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

பஸ்ல பக்கத்துல பக்கத்துல பேசிக்கிட்டே போகலாம்!ஆனா ஒரே பாத்ரூம்ல ரெண்டு பேரா.? காஞ்சி அரசு கட்டிடத்தில் சர்ச்சை

ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பி கோரிக்கை

இந்தநிலையில் மழை பெய்து வருவதால்  திங்கட்கிழமைக்கு விடுமுறை வேண்டும் என்பதால் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விடுமுறை கேட்டு மாணவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். மாணவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய இன்ஸ்டா மேசேஜை தற்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னைவாசிகள் உஷார்.! கடலில் சென்னை மூழ்குவது உறுதி..பதறவைக்கும் காலநிலை அறிக்கை

சமூக வலை தளத்தில் பரவும் மெசேஜ்

அதில் ஒரு சில மாணவர்கள், நாளைக்கு மட்டும் லீவு இல்லைன்னா பைத்தியம் ஆயிடும் போல இருக்கு மேடம்,  மழை பெய்து வருகிறது.. ப்ளீஸ் மேடம் லீவு மட்டும் விடுங்க மேடம் .. உங்களுக்கு கோயில் கட்டுகிறேன் என் மனசுல..  படிச்சு படிச்சு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு மேடம் என மாணவர்கள் ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். மேலும் ஒரு சில மாணவ, மாணவிகள் நாளைக்கு ஸ்கூலுக்கு லீவு விடுங்க நீங்க எடுக்கும் முடிவில் தான் பல பேரோட சந்தோசம் இருக்கு..  நாங்க  ஒன்னும்  டெய்லி லீவு கேட்கல, ஒரு நாள் தான் கேட்கிறோம் அந்த ஒரு நாளா நாளைக்கு பரிசீலனை பண்ணுங்க மேடம் என மெசேஜ் செய்துள்ளனர்.  மாணவர்களின் இந்த குறும்புத்தனமான மெசேஜ் சமூக வலை தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்

Chennai Power Shutdown: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?


 

click me!