சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தி.. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நரிக்குறவர் உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Oct 12, 2022, 9:33 AM IST

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. இந்த சட்ட உதவி மையம் அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் தனக்கு சாதி சான்றிதழ் வேண்டுமென கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த நபர் கையில் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலை முயன்றார். 


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் தீக்குளித்த இளைஞர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. இந்த சட்ட உதவி மையம் அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் தனக்கு சாதி சான்றிதழ் வேண்டுமென கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் அந்த நபர் கையில் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலை முயன்றார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அந்த நபர் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சிறுவனை மடக்கி உல்லாசம்.. கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி.. 3 மாத கர்ப்பத்தால் அதிர்ச்சி..!

இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது, மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த எங்களுக்கு, எங்குமே சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனால் தான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன் என தெரிவித்துள்ளார். 70 சதவீத தீக்காயங்களுடன் வலியால் துடித்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தீக்குளித்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்து உள்ள சேர்மாதூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(45) என்பது தெரியவந்தது. இந்நிலையில், வேல்முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதையும் படிங்க;- மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தீக்குளிப்பு

click me!