சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.18 கோடி தங்கம் பறிமுதல்

Published : Oct 11, 2022, 07:39 PM IST
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.18 கோடி தங்கம் பறிமுதல்

சுருக்கம்

மும்பையில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.18 கோடி மதிப்புடைய 2.7 கிலோ தங்கம் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மும்பையைச் சோ்ந்த 2 பயணிகளை சுங்கத்துறை கைது செய்தது.   

மும்பையில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ்  பயணிகள் விமானத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 2 பயணிகள்  பெருமளவு கடத்தல் தங்கத்துடன்  சென்னைக்கு வந்து கொண்டு இருப்பதாகவும், இந்த கடத்தல் தங்கம் வெளிநாட்டிலிருந்து மும்பை வழியாக உள்நாட்டு விமானத்தில் சென்னைக்கு வருவதாகவும், சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின்  தனிப்படையினர், நேற்று இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மும்பையிலிருந்து வரும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் பயணிகள்  விமானம் இரவு 8.30  மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கி வெளியில் வந்து கொண்டிருந்தனர். 

மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தீக்குளிப்பு

அப்போது சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பெயரில் இரண்டு மும்பை பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் நாங்கள் உள்நாட்டுப் பயணிகள் எங்களை எப்படி சுங்கத்துறையினர் வந்து சோதனை செய்யலாம் என்று வாக்குவாதம் செய்தனா். அதற்கு  சுங்கத்துறையினர், நாங்கள் சந்தேகப்பட்டால் எங்கும் வந்து சோதனை நடத்த எங்களுக்கு உரிமை உண்டு என்றனா். அதோடு இரண்டு பயணிகளின் கைப்பைகளை திறந்து பார்த்து சோதனை நடத்தினார். கைப்பைகளில்  மொத்தம் 27 தங்க கட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 2.7 கிலோ. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 1.18 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாணப் போராட்டம்

இதையடுத்து  சுங்கத்துறையினர் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதோடு 2 மும்பை பயணிகளையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். வெளிநாட்டிலிருந்து மும்பைக்கு இந்த தங்க கட்டிகளை கடத்தி வந்து, அதன் பின்பு சென்னைக்கு உள்நாட்டுப் பயணிகளாக கொண்டு  வருகின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டது. உள்நாட்டு பயணிகளுக்கு சுங்கச் சோதனை இல்லை என்பதால் சுலபமாக தப்பித்து சென்றுவிடலாம் என்று இவர்கள் இவ்வாறு தங்க கட்டிகளை கொண்டு வந்துள்ளனா் என்று தெரிய வந்தது. இந்த தங்கக்கட்டிகள் எந்த நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டது. இவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்? என்று சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!