இன்று வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!! சென்னைக்குள் வருகிறார் ஷண்முக ராஜேஷ்வரன்

 
Published : Jun 29, 2017, 04:19 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
இன்று வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!! சென்னைக்குள் வருகிறார் ஷண்முக ராஜேஷ்வரன்

சுருக்கம்

a list of ips transfer coming today

சமீபத்தில் எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் இன்று அளிக்கப்பட உள்ளது.

தமிழக காவல்துறையின் எஸ்பிக்களாக இருந்த 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், தூத்துக்குடி எஸ்பி அஸ்வின் கோட்னீஸ், அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர், அமீத்குமார், டெல்லியில் பணியாற்றும் பிரதீப்குமார் ஆகியோருக்கு கடந்த மாதம் டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்ட்து.

டிஐஜியாக பதவி உயர்வு பெற்றாலும், அவர்கள் துணை ஆணையர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.

பதவி உயர்வு பெற்ற இவர்கள் உள்பட மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இன்று பணியிடமாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், சென்னை போக்குவரத்து (தெற்கு) இணை ஆணையராகவும், அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் சட்டம் ஒழுங்கு (வடக்கு) இணை ஆணையராகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதுதவிர, பரங்கிமலை துணை ஆணையர் கல்யாண், தி.நகர் துணை ஆணையர் சரவணன், துணை ஆணையர் லட்சுமி, நுண்ணறிவு துணை ஆணையர் விமலா உள்ளிட்டோரும் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

போக்குவரத்து இணை ஆணையர் பவானீஸ்வரி வேலூர் டிஐஜி பணி இடமாற்றம் செய்யப்பட உள்ளார்.

சமீபத்தில் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற சிலருக்கும் உரிய இடம் வழங்கப்பட உள்ளது. பல உயரதிகாரிகள் சென்னைக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இதில் ஷண்முக ராஜேஷ்வரன் சென்னைக்குள் போஷ்டிங் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!