வளி மண்டல் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கி வரும் நிலையில், விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கியது. பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தாமிரபரணி, மணிமுத்தாறு உள்ளிட்டவற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
undefined
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
இந்தநிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி,திண்டுக்கல், கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர்,திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்