சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகம்- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

By Ajmal Khan  |  First Published Dec 13, 2023, 2:09 PM IST

சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் வகையில், தொலைப்பேசிக்கான கால அளவை அதிகரித்தும், வீடியோ கால் மூலம் பேசவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


சிறை கைதிகளுக்கு சலுகை

குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். திருந்தி வாழ்வதற்கு வழி வகுக்க சிறை முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் மன அழுத்தம், மற்றும் குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தின் காரணமாக கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும்  நிகழ்வும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.

Latest Videos

undefined

இதனையடுத்து சிறை கைதிகள் தொலைபேசி மூலம் பேசும் கால அளவை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் ( ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி வழங்குவதோடு காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியினை ஏற்படுத்துதல் புதியதாக ஏற்படுத்த அனுமதி அளித்துள்ளது.

வீடியோ கால் வசதி அறிமுகம்

சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு வெளியிட்டார்.

பெண்கள் சிறையில் வசதி

அதனை செயல்படுத்தும் வகையில், 3 நாட்களுக்கு ஒருமுறை அழைப்புகளின் எண்ணிக்கையை 8 முதல் 10 ஆக அதிகரிக்கவும், அதிகபட்ச அழைப்பு நேரத்தை அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டையில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், பெண்களுக்கான சிறப்பு சிறைகளிலும், போர்ஸ்டல் பள்ளியிலும் இந்த வசதி ஏற்படுத்தித்தரப்படும் எனவும் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

Governor vs CM : நேரில் சந்திக்க அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி..! வேறொரு நாளில் சந்திப்பதாக பதில் அளித்த ஸ்டாலின்

click me!