எங்கே செல்லும் இந்த பாதை? ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் தள்ளாடிய ஐடிஐ மாணவர்கள்; வீடியொ வெளியாகி பரபரப்பு

By Velmurugan s  |  First Published Dec 13, 2023, 1:56 PM IST

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் அரசு ஐடிஐ மாணவர்கள் இருவர் தண்டவாளத்தில் குதித்து தடுமாறி விழுந்து எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் மொத்தம் 8  நடைமேடைகள் உள்ளன. இதில் அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று மாலை 5.30  மணிக்கு நடைமேடை எண் 5ல் அரக்கோணம் அரசு ஐடிஐ சீருடையில்  2  மாணவர்கள் தண்டவாளத்தில் குதித்து கட்டி பிடித்து புரண்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

ஒரு மாணவன் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் விழ இன்னொரு மாணவன் அவனை தாங்கிப் பிடிக்கிறான். அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுகிறான். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் நடைமேடை எண் 5ல் எந்த ரயில்களும் வரவில்லை. இந்த சம்பவங்களை அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ரயில் பயணிகள்,  ரயில்வே ஊழியர்கள்,  பார்த்து திகைத்து நின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன் பின்னர் அரக்கோணம் ரயில்வே போலீசார் அங்கு வந்து அவர்களை விரட்டி அடித்தனர். கஞ்சா போதையில் ஐடிஐ படிக்கும் மாணவர்கள் ரயில் தண்டவாளத்தில் கட்டி புரண்ட சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் முகசுழிப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.  அதே நேரம் ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

click me!