தேனி மாவட்டம் கம்பம் அருகே சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (25). வழக்கு ஒன்றில் போலீசார் அவரை தேடிவந்தனர். அப்போது அவருடன் சென்ற பிரபுதேவா(26) என்பவர் ஆற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கம்பத்தில் வாலிபர் தூக்கிட்டு இறந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (25). வழக்கு ஒன்றில் போலீசார் அவரை தேடிவந்தனர். அப்போது அவருடன் சென்ற பிரபுதேவா(26) என்பவர் ஆற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், இறந்த பிரபுதேவாவின் நண்பரான கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (25). இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் சிலருடன் கம்பம் மின்வாரிய அலுவலக தெரு பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் நண்பர்கள் சைடிஷ் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளனர். மீண்டும் வந்து பார்த்த போது கருவேல மரத்தில் தூக்கில் தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சியைந்த நண்பர்கன் மரத்தில் இருந்து அவரை இறக்கி கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரேம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பிரேம்குமாரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் கூறி ம மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.