தாம்பரம் தனியார் பள்ளியில் பர்தா அணிந்து வந்த பெற்றோருக்கு தடை...! அதிர்ச்சியில் மாணவிகள்... நடந்தது என்ன..?

By Ajmal KhanFirst Published Aug 29, 2022, 12:12 PM IST
Highlights

தாம்பரம் சங்கர வித்யாலயா  தனியார் பள்ளிக்கு மாணவியின் தாய் பர்தா அணிந்து சென்ற நிலையில் உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பர்தா அணிந்து வர தடை

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழகத்தில் தாம்பரத்தில் தனியார் பள்ளியில் இதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல்நிலையத்தில், மனித நேய மக்கள் கட்சி மற்றும்  தாம்பரத்தை சேர்ந்த ஆசீக் மீரான் என்பவர் சங்கர வித்யாலயா பள்ளி மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் ஆசிக் மீரான் ஆகிய நான், சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருகிறேன். கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கர வித்யாலயா என்ற பள்ளியில் நேற்று மதியம் சுமார் 1. 15 மணிக்கு என்னுடைய 4 வயது பெண் குழந்தைக்கு பள்ளியில் , எல்கேஜி படிப்பதற்கு இடம் கேட்டு என் மனைவியுடன் பள்ளிக்கு சென்றிருந்தேன்.  பள்ளிக்கூட உள்ளறையில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், அங்கு வந்த பள்ளியின் அலுவலர் சுந்தர ராமன் என்பவர் என்னை தனியாக அழைத்து, உங்கள் மனைவியின் பர்தாவை வெளியில் சென்று கழட்டி வைத்துவிட்டு உள்ளே வரவேண்டும் என தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

அண்ணன் பழைய பாசத்தோடு சொல்றேன் கேளு தம்பி...! ஆர் பி உதயகுமாருக்கு அறிவுரை வழங்கிய டிடிவி தினகரன்

காவல் நிலையத்தில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி முதல்வர் உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்தபோது, பள்ளியின் உள்ளே ஹிஜாப் அணிந்து யாரும் வர அனுமதியில்லை என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். எனவே  சட்டத்திற்கு புறம்பாக சிறுபான்மை இஸ்லாமிய மக்களுடைய நம்பிக்கைக்கு எதிராகவும் பள்ளி செயல்படுவதாக புகார் அளித்துள்ளார். மேலும் மேலும் இந்திய அரசியல் அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை மீறிய வகையில் இந்த செயல்பாடு அமைந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே பள்ளி மேலாளர் சுந்தரராமன் மற்றும் இவருக்கு ஆதரவாக இருக்கக்கூடிய  பள்ளி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த புகார் தொடர்பாக சேலையூர் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜக..? பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது- வைகோ ஆவேசம்

 

click me!