
சிதம்பரம் பஸ் நிலையம் அருகே இறந்த பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது
சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள மரத்தின் அடியில் பெண் குழந்தை சடலம் இருந்துள்ளது.
பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்
இதனை தொடர்ந்து,சிதம்பரம் நகர போலீசார் பெண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர்.
ஒரு வேளை குழந்தை இறந்து பிறந்திருந்தால், இவ்வாறு தூக்கி போட வேண்டிய அவசியம் இருக்காது என்றும், பெண் குழந்தை என்பதால் கொல்லப்பட்டு தூக்கி எறியப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.
பச்சிளம் குழந்தை என்றும் பாராமல்,இந்த கொடூர செயலை செய்தவர் யார் என்று மக்கள் பொங்கி எழுகின்றனர்.
இறந்து சடலமாக இருக்கும் குழந்தையின் அருகில், ஒரு மஞ்சள் நிற கைப்பை இருப்பதால்,குழந்தையை கொன்று அந்த கைப்பையில் கொண்டு வந்து வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.