
அண்டை மாநிலங்கள் அவரவர் மொழி பாடத்தை கட்டாயமாக்கியது போலவே தமிழகத்திலும் தமிழை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ளது சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு இலக்கிய மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடைப்பெற்றது. இதில், நடிகர் சிவக்குமார பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளிடையே சிறப்புரை ஆற்றினார்.
விழா முடிந்த பிறகு நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், "ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மொழி பாடங்கள் கட்டாயமாக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் வேறு மொழிகளில் படித்தால்தான், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தவறான புரிதல் உள்ளது.
எனவே, தமிழை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையாவது கட்டாய பாடமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.