நடுவானில் பறந்துகொண்டே பொங்கல் சாப்பிடலாம் - பயணிகளுக்கு இரண்டு வகை பொங்கலுடன் வாழ்த்துகள் சொல்லும் ஜெட் ஏர்வேஸ்...

 
Published : Jan 13, 2018, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
நடுவானில் பறந்துகொண்டே பொங்கல் சாப்பிடலாம் - பயணிகளுக்கு இரண்டு வகை பொங்கலுடன் வாழ்த்துகள் சொல்லும் ஜெட் ஏர்வேஸ்...

சுருக்கம்

Pongal can be given by Jet Airways for greetings with Pongal ...

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நாளை வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது.

தை முதல் நாளை தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு நாளை பொங்கல் திருநாளன்று வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட இருக்கிறது..

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சிற்றுண்டி உணவுப் பட்டியலில் தமிழரின் பாரம்பரிய உணவான பொங்கலை சேர்த்து, பொங்கல் திருநாளில் தமிழர்களை சிறப்பித்துள்ளது.

காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் மற்ற உணவு பொருட்களோடு இந்த இரண்டு வகை பொங்கலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் வெவ்வேறு ஊர்களுக்கு பயணிக்கும் தமிழர்கள் உள்பட அனைத்து பயணிகளுக்கும் பொங்கலை கொண்டாட இப்படி ஒரு வாய்ப்பை ஜெட் ஏர்வேஸ் வழங்கியுள்ளது. இதன்மூலம் தமிழர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளை மகிச்சியுடன் தெரிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!