உலக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில், ரசிகர்கள் விளையாட்டு போட்டியை நேரடியாக ரசிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் பீச்சில் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
இந்தியாவில் உலக கோப்பை கோட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆ்ஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோத வேண்டும் அந்த வகையில் இந்திய அணி எதிர்கொண்ட 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதே போல ஆஸ்திரேலியா அணி தான் எதிர்கொண்ட 9 போட்டியில் 7 போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டியை எட்டியது. இதனையடுத்து இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது. பிரம்மாண்ட மைதானமான இதில் ஒரு லட்சத்து 30ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் உள்ள ரசிகர்கள் வகையில் கிரிக்கெட் போட்டியை ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்ட ஸ்கிரின் அமைக்கப்பட்டுள்ளது. மதியம் வேளை என்பதால் வெளிச்சம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் போட்டியை பார்க்க முடியாத நிலை உள்ளது. இதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வெளிச்சம் குறைந்ததும் போட்டியை பார்க்க அதிகளவு மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இந்தியாவின் முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்து தடுமாறி வருவதன் காரணமாக பொதுமக்கள் கூட்டும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
இதையும் படியுங்கள்