மனைவியிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய டாக்டர்….. அதுக்கு அவர் செஞ்ச கேவலமான காரியத்தைப் பாருங்க…..

 
Published : Jun 05, 2018, 09:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
மனைவியிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய டாக்டர்….. அதுக்கு அவர் செஞ்ச கேவலமான காரியத்தைப் பாருங்க…..

சுருக்கம்

A docter threatned his wife to ask 10 lakhs

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து காலி கட்டிய மனைவியை ஆபாசமாக படம் எடுத்து 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அரசு டாக்டரையும், அதற்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சேலத்தை சேர்ந்தவர் அரசு பெண் டாக்டர். 42 வயதான இவர் தற்போது கோவையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த சென்னையில் பணிபுரியும் அரசு டாக்டர் ஒருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்த நிலையில் பெண் டாக்டர் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு விவகாரத்து கேட்டு என்னிடம் வற்புறுத்தி வந்ததாகவும், சேலத்தை சேர்ந்த ஒரு வக்கீலுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு எனக்கு தெரியாமல் என்னை ஆபாசமாக  படம் எடுத்துள்ளார். என்றும் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், சேலத்தில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த படங்களை பேஸ்புக், வாட்-அப்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த நான் விவாகரத்து கொடுத்ததுடன், எனது பெயரில் இருந்த வீட்டையும் எழுதி கொடுத்து விட்டேன். தற்போது ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்கவும், அதனை என்னிடம் ஒப்படைக்கவும் ரூ.10 லட்சம் கேட்பதுடன் அதனை ஏற்காட்டிற்கு கொண்டு வந்து தர வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்..

மேலும் நாங்கள் சொன்னப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் எனது கணவரும், அந்த வக்கீலும் மிரட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறி இருந்தார்.

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு கமி‌ஷனர் உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பெண் டாக்டரின் கணவரான அரசு டாக்டர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வக்கீல் மீதும் 4 பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!