கண்களை கட்டிக்கொண்டு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... இவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

First Published Jun 5, 2018, 9:32 AM IST
Highlights
Nutritional staff demonstrated in kanniyakumari Are their demands fulfilled?


கன்னியாகுமரி

கண்களை கட்டிக்கொண்டு சத்துணவு ஊழியர்கள் கன்னியாகுமரி ஆட்சியரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்களை கட்டிக்கொண்டு நேற்று ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி. வில்பிரட் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பி. நிர்மலாபாய் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

"சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை முறையாக வழங்கவேண்டும். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நீக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 

8-வது ஊதிய மாற்ற அலுவல் குழுவில் மறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்கவேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி. பகவதியப்பபிள்ளை, மாவட்டச் செயலர் கிறிஸ்டோபர், மாவட்டப் பொருளாளர் பி. சுமதி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் எம். கோலப்பன், நாஞ்சில்நிதி, பி. நீலதங்கம், உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி. தங்கம் நன்றி தெரிவித்தார்.

click me!