தனியார் பேருந்தின் சக்கரம் ஏறி  இறங்கியதில் இளைஞர் தலை நசுங்கி சாவு...

 
Published : Jun 05, 2018, 08:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
தனியார் பேருந்தின் சக்கரம் ஏறி  இறங்கியதில் இளைஞர் தலை நசுங்கி சாவு...

சுருக்கம்

Youth head crashing down the wheel of private bus

காஞ்சிபுரம்
 
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தின் சக்கரம் ஏறி  இறங்கி இளைஞர் ஒருவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(30). இவர், நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். 

அவர், செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சி அருகே சென்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த தனியார் பேருந்து, மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியது. 

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாண்டியன் தலையில் தனியார் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து அறிந்ததும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், பாண்டியனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!