மீண்டும் ஒரு மரணக்குழி - மெட்ரோ பணியால் தொடரும் தொல்லை...

 
Published : May 06, 2017, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
மீண்டும் ஒரு மரணக்குழி - மெட்ரோ பணியால் தொடரும் தொல்லை...

சுருக்கம்

a big hole in kilpauk road

சென்னை மெட்ரோ ரயில் பணியால் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் 6 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக  19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை, கிண்டி வழியாக மீனம்பாக்கம் ரயில் நிலையம் வரையும், சென்னை கடற்கரையில் இருந்து அண்ணாநகர், கோயம்பேடு வழியாக பல்லாவரம் வரையிலும் இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இதில் முதல்  கட்டமாக கோயம்பேடு முதல் கிண்டி வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதே வழித்தடத்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலான 35 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

வண்ணாரப்பேட்டை, மற்றும் அண்ணா சாலை முழுவதும் பாதாள ரயில் பாதை அமைக்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பூமிக்கடியில் சுரங்கம் அமைக்கப்படுவதால் அவ்வப்போது லேசான நில அதிர்ச்சி, வீடுகளில் விரிசல், சாலையில் பள்ளம் ஆகியவை ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு அண்ணாசாலையில் பிரமாண்ட பள்ளம் ஏற்பட்டது. இதில் ஒரு அரசுப் பேருந்தும், காரும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வண்ணாரப்பேட்டையில் உள்ள லாலாகுண்டா,முத்தையா மேஸ்திரி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் குழங்கின. சாலையில் ஓட்டை ஏற்பட்டு அதில் இருந்து சிமெண்ட் கலவை ஆறாக ஓடியதாலும் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. 

இந்த வரிசையில் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த மெட்ரோ ஊழியர்கள் சிமெண்ட் கலவையைக் கொண்டு பள்ளத்தை அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!