தென்காசியில் 3 பேரை தாக்கிய கொடூர கரடி.! வனப்பகுதியில் விடப்பட்ட சில மணி நேரத்தில் மர்மான முறையில் உயிரிழப்பு

By Ajmal KhanFirst Published Nov 8, 2022, 10:41 AM IST
Highlights

தென்காசி மாவட்டத்தில் 3 பேரை கொடூரமாக கரடி தாக்கிய நிலையில், கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் கரடி மர்ம்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களை தாக்கிய கரடி

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த பாவூர்சத்திரம் கருத்தலிங்கபுரத்தைச் சேர்ந்த அருள்மணி  (55 வயது)  என்ற வியாபாரியை அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து வெளிவந்த கரடி ஒன்று தாக்கியுள்ளது. அருள்மணி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சாலையில் சென்றவர்கள் கரடி மீது கல்வீசி துரத்தினர். ஆனால், கரடி அருள்மணியைவிட்டு செல்லவில்லை, அப்பகுதி மக்களையும் கரடி எதிர்த்து தாக்கியது. அவரை காப்பாற்றுவதற்காக சென்ற பெத்தான் பிள்ளை குடியிருப்பைச் சார்ந்த சகோதரர்கள் நாகேந்திரன், சைலப்பன் என்ற இருவரும் கரடியின் கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கரடியின் கொடூர தாக்குதலுக்கு ஆளான 3 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எலிகாய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு.. கோவையில் பரபரப்பு !

கரடி கடித்ததில் நாகேந்திரன் தன்னுடைய இரண்டு கண்களையும், மூக்கையும் இழந்துள்ளார்; வாய் மற்றும் உடல் முழுவதும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சைலப்பன் ஒரு கண்ணையும், தனது மூக்கையும் இழந்துள்ளார்; தன் முன்பகுதி உடல் முழுவதும் மிக பலத்த காயத்திற்கு ஆட்பட்டுள்ளார். காயம் பட்ட நாகேந்திரனும், சைலப்பனும் மிக மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் வனத்துறையினர் கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அந்த கரடியை எடுத்துச் சென்று தென்காசி மாவட்ட  பகுதியில் உள்ள அடர்வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

Bear Attack Tenkasi: தென்காசியில் கரடி தாக்கி 3 பேர் படுகாயம்: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ

இந்தநிலையில் வனப்பகுதிக்குள் விட்ட கரடி நேற்று இரவு  இறந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  கரடியின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டபோது  கரடியின் மூக்கு,  நுரையீரல் பகுதியில் ரத்தகாயம் இருந்ததாகவும் குடலில் விஷம் இருந்ததற்கான சாத்திய கூறுகள் மற்றும் குடல் பகுதியில் அதிக ரத்தகசிவு இருந்ததாகவும் தகவல்கள்  வெளியாகி உள்ளது.  எனவே கரடியை யாரேனும் தாக்கியிருப்பார்களா அல்லது 3 பேரை கரடி தாக்கிய போது பொதுமக்கள் கற்களை கொண்டு தாக்கியதில் கரடிக்கு காயம் ஏற்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் இரண்டு தினங்களில் மிக கன மழை.! புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

click me!