செல்போனில் வங்கி அதிகாரி போல பேசி ரூ.1 இலட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்; போலீஸ் தேடுதல் வேட்டை…

 
Published : Sep 13, 2017, 07:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
செல்போனில் வங்கி அதிகாரி போல பேசி ரூ.1 இலட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்; போலீஸ் தேடுதல் வேட்டை…

சுருக்கம்

A banker who was a bank officer in cellphone and a looter who looted Rs.1 lakh

விழுப்புரம்

செல்போனில் வங்கி அதிகாரி போல பேசி கிராம குழுவின் கணக்கில் இருந்த ரூ.1 இலட்சத்து 47 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபரை தேடும் வேட்டையில் காவலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஒருங்கிணைந்து கிராம குழுவை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தலைவியாக ரபேக்கா (55) என்பவரும், பொருளாளராக மதியழகனும் செயல்படுகின்றனர்.

இந்தக் குழுவிற்காக மேல்மலையனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில் கணக்கு ஆரம்பித்து குழு சம்பந்தமாக பண பரிவர்த்தனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்தக் குழுவின் பொருளாளரான மதியழகனின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் வங்கி அதிகாரி பேசுவதாகவும், தங்களது குழுவின் வங்கிக் கணக்கைச் சரிபார்க்க வேண்டும் எனவும் கூறி அவரிடமிருந்து கிராம குழுவின் வங்கி கணக்கு எண்ணை கேட்டுள்ளார்.

அதனை நம்பி மதியழகனும் கிராம குழுவின் வங்கி கணக்கு எண்ணை அவரிடம் கொடுத்துள்ளார். பின்னர், மதியழகன் ஏற்கனவே வங்கியில் கொடுத்திருந்த அவரது செல்போன் எண் மூலம் இணையதளம் வழியாக பண பரிவர்த்தனை செய்வதாக கூறினார்

மேலும், மதியழகனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக வந்த ரகசிய எண்ணின் விவரங்களை அந்த நபர் பெற்றுவிட்டு செல்போன் இணைப்பைத் துண்டித்து விட்டாராம்.

பின்னர் சிறிது நேரத்தில் கிராம குழுவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 இலட்சத்து 47 ஆயிரம் எடுக்கப்பட்டது என்று மதியழகனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து குழுவின் தலைவி ரபேக்காவிடம் தெரிவித்தார். மேலும், மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் நேவிஸ் அந்தோணிரோஸி மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து வங்கி அதிகாரிபோல் பேசி நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!