டிரைவிங் லைசென்ஸ் இல்லைன்னாலும் புதிய வாகனங்கள் வாங்கலாம் !! உயர்நீதிமன்றம் அதிரடி !!!

First Published Sep 13, 2017, 7:08 AM IST
Highlights
original lisence not nessary for register new vehicle


ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை, பதிவு செய்யக் கூடாது என, போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு, சென்னை உயர்நீதிமன்றம், தடை விதித்துள்ளது.

கடந்த மாதம்  21ம் தேதி  போக்குவரத்து ஆணையர், பிறப்பித்த சுற்றறிக்கையில், 'ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால், அந்த வாகனத்தை பதிவு செய்யக் கூடாது' என, கூறப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில்,சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மனுவில், :விற்பனையாளரிடம் இருந்து வாகனங்கள் வாங்கிய பின், அதை பதிவு செய்ய வேண்டும்; அவ்வாறு பதிவு செய்யும்போது, வாகனம் வாங்கியவருக்கு, அதை ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதனால், வாகனத்தை வாங்கியவர், ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற, அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்ததது.

எனவே, ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்பதை வலியுறுத்தாமல், வாகனங்களை பதிவு செய்யும்படி, போக்குவரத்து துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி, எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி,  சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்தார்.

 

 

click me!