கடலூரில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உயிரிழப்பு; உறவினர்கள் மறியலால் பதற்றம்

By Velmurugan s  |  First Published Jun 6, 2023, 11:01 AM IST

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்ற சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழப்பு.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம், வாகையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தாமரை (வயது 43). இவர் அதே பகுதியில் 9ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தமக்கு நேர்ந்த பாதிப்புகளை தனது தந்தையிடம் கூறிவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்று வீட்டின் கதவை பூட்டி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராமநத்தம் காவல் துறையினர் செந்தாமரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tap to resize

Latest Videos

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் படுகொலை - காவல்துறை விசாரணை

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் செந்தாமரை மீது கொலை வழக்கு பதிய வேண்டும், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. செந்தாமரைக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

அரசு விழாவில் சுவர் ஏறி குதித்து சென்ற எம்எல்ஏ; முதல்வர் முன்னிலையில் ஆவேசமாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

click me!