திண்டுக்கல் அருகே அரிசி ஆலையில் இருந்து வரும் புகையால் பொதுமக்கள் குழந்தைகள் மூச்சு விட முடியாமல் அவதி பலமுறை மாசுக்கு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது சாலையூர். இப்பகுதியில் உள்ள விநாயகர் நகர் காமாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட அரிசி அரைக்கும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தொடர்ந்து உமி அரைக்கும் புகை வெளியே வருகிறது இதில் அனைத்து வீடுகளிலும் புகை மண்டலமாகவும் கறி துகள்களாகவும் உள்ளன. மேலும் சமைக்கும் சமையல் முதல் குடிப்பதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் வரை அனைத்து பகுதிகளிலும் கறி துகள் படிவதோடு, வீடு முழுவதும் கறி துகள்கள் படிந்துள்ளன.
இதனால், முதியவர்கள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஆஸ்மா உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இனிமேலும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்தகட்ட போராட்டமாக சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.