திண்டுக்கல்லில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை குளத்தில் வீச்சு; காவல்துறை விசாரணை

By Velmurugan s  |  First Published Jun 3, 2023, 11:54 AM IST

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன் பட்டியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி செட்டிநாயக்கன்பட்டியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மிகப்பெரிய குளம் உள்ளது. குளத்தில் உள்ள தண்ணீர் பொதுமக்களின் நிலத்தடி நீருக்காகவும், விவசாயத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் காலைக்கடனுக்காக குளத்தின் அருகே சென்ற பொழுது பிறந்து சில நாட்களான பெண் குழந்தையின் சடலம் மிதந்துள்ளது. இதை அடுத்து தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து யார் இந்த குழந்தையை குளத்தில் போட்டது? எதற்காக குளத்தில் எரிந்து சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தையின் உடல் குளத்தில் உயிரிழந்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்; சிறுவாணி அணை நீர்மட்டம் 2.85 அடியாக சரிவு

click me!