திருமணம் முடிந்து இரண்டு மாதமான புதுப்பெண்ணை காணவில்லை என பெண்ணின் பெற்றோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி லதா. இவர்களுக்கு புஷ்பவல்லி. இலக்கியா என்ற இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் இரண்டாவது மகளான இலக்கியாவிற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த நபருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அன்று பகலில் வெளியே சென்ற இலக்கியா அதன் பின் வீடு திரும்பவில்லை.
undefined
உறவினர்கள் உட்பட நண்பர்கள் என அனைவரிடமும் விசாரித்தும் தற்போது வரை மகள் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. என்றும் அம்பாத்துறை காவல் நிலையம் மதுரை அலங்காநல்லூர் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் புகார் அளித்தும் இதுவரை தனது மகளை கண்டு பிடித்துக் கொடுக்கவில்லை என்று கூறி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இலக்கியாவின் தாய் லதா மற்றும் அவரது தந்தை கார்த்திகேயன். இலக்கியாவின் மாமியார் மீனாட்சி ஆகியோர் புகார் வழங்குவதற்காக வந்தனர்.
ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு டப்பா போனை அனுப்பி விபூதி அடித்த ஆன்லைன் நிறுவனம்
மேலும் அவர்கள் கூறும் பொழுது தனது மகள் காணாமல் போய் தற்போது வரை 25 நாட்கள் ஆகிவிட்டது. தற்போது வரை காவல்துறையினர் கண்டுபிடித்து தரவில்லை. உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. காவல் நிலையத்தில் தொடர்பு வேண்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதல் தற்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்துள்ளோம். எனது மகளை உயிரோடு கண்டுபிடித்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். எனது மகள் 10 பவுன் நகையுடன் மாயமாகி உள்ளார். எனது மகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்து தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
10 ரூபாய்க்கு அண்லிமிடட் சாப்பாடு; ஏழை, எளியோரின் பசியாற்றும் தனியார் அறக்கட்டளை