Watch : பழனி மலை ஏறியவருக்கு நெஞ்சுவலி! மருத்துவ உதவி கிடைக்காமல் தவிப்பு!

By Dinesh TG  |  First Published May 25, 2023, 2:06 PM IST

பழனி மலைக் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் படிப்பாதையில் நெஞ்சு வலியால் மருத்துவ உதவி கிடைக்காமல் துடித்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.


அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை , மின் இழுவை ரயில், ரோப் கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். படிப்பாதை வழியாக 650 படிகளும், யானை பாதை வழியாக சுமார் 200 படிகளும் உள்ளது, மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் வருகை அதிகம் காரணமாக சுமார் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமலும், படிப்பாதையில் செல்லும்போது மூச்சுத் திணறல், நெஞ்சு வலி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள பக்தர்கள் செல்லும்போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மின் இழுவையில் நிலையம் கீழ்ப்பகுதியில் திருக்கோவில் மருத்துவமனையும் , மலைக்கோவிலில் ஒரு மருத்துவமனையும், படிப்பாதை யானை பாதை இணையும் வழியில் இடும்பர் கோவில் அருகில் மருத்துவ மருத்துவமனையும் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் நேற்று இரவு யானை பாதை வழியாகச் சென்ற ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வழியின் காரணமாக கீழே படுத்து உருளும் போது அப்போது அங்கு வந்த பக்தர்கள் இடும்பன் கோவில் அருகில் உள்ள மருத்துவ மனையில் தகவல் தெரிவிப்பட்டு தூக்கி செல்ல ஸ்ட்ரெச்சரை தேடுவதற்கே பல நிமிடங்கள் ஆனதாக அதுவரை பக்தர் கீழே படுத்து உருண்டு வலியால் துடித்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.



நீண்ட நேரத்திற்கு பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்ட பக்தரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறபடுகிறது. ஏற்கனவே கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் படிப்பாதையில் நடந்து சென்ற போது நெஞ்சு வலியால் துடித்து மலைக்கோவில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் வெண்டிலேட்டர் வசதி இல்லாமலும் மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் வசதி இல்லாத ஆம்புலன்சில் அனுப்பிய போது ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்த செய்திகள் வெளியான நிலையிலும் நவீன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதியை திருக்கோயில் நிர்வாகம் உருவாக்கி தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் ஒரு பக்தர் படிப்பாதையில் நெஞ்சு வலியால் துடிதுடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

Tap to resize

Latest Videos

click me!