திண்டுக்கல்லில் மான் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது; மான் கறி, துப்பாக்கிகள் பறிமுதல்

By Velmurugan s  |  First Published May 24, 2023, 5:53 PM IST

திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதியில் மானை வேட்டையாடிய மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவர்களிடமிருந்து மான் கறி, மான் தலை மற்றும் 5 துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மான், யானை, குரங்கு, பறக்கும் அணில் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கிராமம் புல்லாவெளி பகுதியில் வனத்துறை வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

Latest Videos

அப்போது வனத்துறையினரை கண்டு ஏழு பேர் ஓடியுள்ளனர். அவர்களைப் பிடிக்க வனத்துறையினர் முயன்ற போது வனத்துறையினரிடம் மூன்று பேர் மட்டுமே சிக்கினயுள்ளனர். வனத்துறையினர் விசாரணை செய்த பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆண் கடமான் ஒன்று வேட்டையாடியது தெரிய வந்தது. வன உயிரினக் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு   மணலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிலிங்கம், ரஞ்சித், மதன்குமார் ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர்.

32 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்தப்பட்ட 5 நாட்டு துப்பாக்கிகள்  பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் ஆத்தூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி பழனி சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தப்பி ஓடிய நான்கு குற்றவாளிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

click me!