திண்டுக்கல்லில் மது அருந்த பணம் தராத செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து

Published : May 24, 2023, 10:47 AM IST
திண்டுக்கல்லில் மது அருந்த பணம் தராத செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து

சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மது அருந்த பணம் தராத செருப்பு தைக்கும் கூலித் தொழிலாளியை அவரது கத்தியை பிடிங்கி அவரையே தாக்கிய சம்பவம் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள ஏர்போர்ட் நகரைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 50).  இவருக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 7ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கதிரேசன் அரசு மருத்துவமனை முன்பு செருப்பு தைக்கும் தொழில் செய்து செய்து வருகிறார். 

கதிரேசனுக்கும் முனிசிபல் காலனியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும் முன்கூட்டியே நட்பு ரீதியாக கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கதிரேசனிடம் சேகர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். கதிரேசன் பணம் இல்லை என கூறியதால், ஆத்திரம் அடைந்த சேகர்  செருப்பு தைக்கும் கத்தியை பறித்து  கதிரேசனின் முகத்தில் வெட்டியுள்ளார். 

சேலத்தில் ஆம்புலன்ஸ் மோதி தூக்கி வீசப்பட்ட தாத்தா, பேரன்; சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி

இதில் பலத்த காயமடைந்த கதிரேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கத்தியால் குத்திய சேகர் என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகர் பகுதியில் செருப்பு தைக்கும் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கல்யாணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு! நெஞ்சில் அடித்து கதறும் குடும்பம்! மனைவி அப்படி என்ன செய்தார்?
தலை தீபாவளி அதுவுமா எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்! இருந்தாலும் ரூபியாவுக்கு இவ்வளவு கோபம் இருக்கக்கூடாது