காற்றில் பறந்த அமைச்சர் வாக்குறுதி! - டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டு வாங்க மறுப்பு! ஊழியரின் திமிர் பேச்சு!

By Dinesh TG  |  First Published May 23, 2023, 9:33 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவை மீறி வேடசந்தூர் பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க மறுக்கின்றனர். அவ்வாறு 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என்று எந்த உத்தரவும் வரவில்லை என்று டாஸ்மார்க் ஊழியர் திமிராக பேசியுள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கரூர் ரோட்டில் இரண்டு அரசு மதுபான கடைகளிலும் ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஒரு மதுபான கடையும் குங்கும காளியம்மன் கோவில் அருகே மதுபான கடைகளிலும் செயல்பட்டு வருகிறது

கடந்த ஐந்து நாட்களாக மதுபான பார்கள் மூடப்பட்டு உள்ளது இதனால் குடிமகன்கள் மிகவும் அவதிக்குள்ளாகி பேருந்து நிலையம் அருகிலும் சாலையையும் குடித்துவிட்டு உலா வருகிறார்கள்

இதுகுறித்து விசாரிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எந்த மதுபான கடைகளுக்கும் அனுமதி இல்லாமல் நடைபெற்று உள்ளதாகவும் திமுக கட்சிக்குள் உள்கட்சி பூசல் நடப்பதால் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்



மேலும் டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் 2000 ரூபாய் கொடுத்து மது பாட்டில் கேட்டால் பணம் வாங்க முடியாது என்று கூறுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு தினங்களுக்கு முன்பு பேட்டியளிக்கையில் டாஸ்மாக்கில் பணத்தை வாங்க கூடாது என்று சொல்லவில்லை என்று பகிரங்கமாக பேட்டி அளித்தும் வேடசந்தூரில் செயல்படும் நான்கு மதுபான கடைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க ஊழியர்கள் மறுக்கின்றனர். நாங்கள் 2000 ரூபாய் வாங்கினாலும் வங்கிகளில் பணத்தை அவர்கள் வாங்க மறுக்கிறார்கள் என்றும் 2000 ரூபாய் பணம் வாங்க வேண்டும் என்று எந்த உத்தரவும் வரவில்லை என்று பகிரங்க வாக்குமூலம் அளிக்கிறார்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவை மீதும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

Tap to resize

Latest Videos

click me!