திண்டுக்கல் மாவட்டத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் குறுக்கே வந்த மாமியாரை கத்தியால் தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்து பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை உள்ளது. இந்த பகுதியில் முத்துசாமி (வயது 31). இவர் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி சூர்யா (வயது 25). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அதே பகுதியில் சூர்யாவுடைய அம்மா மகாலட்சுமி (45) இவரது கணவர் முனியாண்டி (50) ஆகியோரும் வசித்து வருகின்றனர்.
முத்துசாமிக்கும் அவரது மனைவி சூர்யாவுக்கும் அடிக்கடி சண்டை வருவதும் சண்டை வரும்பொழுதெல்லாம் சூர்யா கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு செல்வதும், மறுபடியும் முத்துசாமி வீட்டிற்கு மனைவியை அழைத்து வருவதும் வழக்கமானதாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மறுபடியும் கணவன், மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
திமுக பிரமுகர் கொலை? புதுக்கோட்டையில் 3 நாட்களாக தொடரும் பரபரப்பு
சண்டையை காரணம் காட்டி கோபித்துக் கொண்டு சூர்யா அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை வழக்கம்போல் கூப்பிடுவதற்கு செல்லும்போது அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை தாக்க முயற்சிக்கும் போது நடுவில் மாமியார் மகாலட்சுமி வந்து தடுத்துள்ளார். இதனால் கத்தி மகாலட்சுமியின் தலையிலும், கன்னத்திலும் பட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் மகாலட்சுமியை வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வெறியுடன் தாக்கிய முத்துசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.